இன மோதல் மற்றும் மத தீங்கு
இன முரண்பாடு மற்றும் மதம்சார் தீங்கு ஆனது இலங்கையில் காலணித்துவத்திற்குப் பின்னரான கடுமையான இனவன்முறை மற்றும் சிவில் யுத்தம் பற்றிய வரலாற்றிற்கிடையிலான தொடர்புகளை ஆராய்கின்றது. இலங்கையில் நிலவிய இனத்தேசியவாதமும் கருத்தியல் மோதல்களும் மதவழிபாட்டு இடங்களில் பாரிய தாக்கத்தை உண்டுபன்னியது. கிறிஸ்தவப் ஆலயங்கள், பௌத்த தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிகள் மற்றும் இந்துக் கோவில்கள் நாடுபூராகவும் உள்ள சமூகங்களிற்கு நெருக்கடியான மற்றும் கடினமான காலங்களின் போது ஆதரவு, அடைக்களம், பாதுகாப்பு மற்றும் ஆன்மீக ஓய்வு வழங்கும் சரணாலயங்களாக செயற்பட்டன.
‘ஆயுத மோதலின் போது கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஹேக் மாநாடு மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உட்பட கலாச்சார சொத்துக்களை மதிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுவதுடன் மக்களுடைய ஆன்மீக பாரம்பரியத்துடன் சம்பந்தப்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்கள், கலைப்படைப்புக்கள் அல்லது மத வழிபாட்டுதலங்கள் என்பற்றின் மீது குறிவைப்பதையும் தடைசெய்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கையின் வடகிழக்கில் காணப்பட்ட அத்தகைய தளங்கள் மற்றும் அங்கு வசித்த மதத் தலைவர்கள் மற்றும் மதகுருமார்கள் அரச மற்றும் அரசு சாராத செயற்பாட்டாளர்களின் எவ்வித பொறுப்புக்கூறலும் அற்ற போர்க்கால வன்முறை நடவடிக்கைகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போரிடும் தரப்பினரின் கைகளால் எவ்வாறு பழிவாங்கும் செயல்களுக்கு பரவலாக உட்படுத்தப்பட்டன மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களை எவ்வாறு கடுமையாக பாதித்தன என்பதையும் நாம் கவனத்தில் கொண்டோம்.
இந்த அருங்காட்சியகத்தின் இன முரண்பாடு மற்றும் மதம்சார் தீங்கு பற்றிய பகுதியானது பல தசாப்தங்களாக அரசு மற்றும் அரசுக்கு எதிரான வன்முறையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிபளிப்பிற்கும் நினைவுகூறுதலிற்குமான பிரத்தியேகமான இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தற்போது சிவில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடந்தேறிய மதம்சார் தீங்குகளிற்கான பல உதாரணங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. தற்போது இதில் அரந்தலாவை படுகொலை (1987), காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் மீதான தாக்குதல் (1990), நவாலி கிறிஸ்தவ பள்ளி மீதான குண்டுவெடிப்பு தாக்குதல் (1995) மற்றும் மடுமாதா ஆலயத்தின் மீதான ஷெல் தாக்குதல் (1999) என்பவற்றை உள்ளடக்கியுள்ளதுடன் படிப்பினை மற்றும் நினைவுகூறுதலிற்காக இவற்றை விஸ்தரிக்கும் தொடர்ந்தேர்ச்சையான முயற்சியையும் உள்ளடக்கியுள்ளது.
அநுராதபுர படுகொலை (1985), வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம், கண்டி புனித தளதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல் (1998), பேசாலை கிறிஸ்தவ தேவாலயத்தின் மீதான தாக்குதல் (2006) மற்றும் யுத்தத்தின் போது முற்றிலும் அழிக்கப்பட்ட 240 இந்து மதஸ்தலங்கள் உள்ளடங்கலாக சேதமாக்கப்பட்ட 1560 இந்து கோவில்களின் முக்கியத்துவத்தையும் நாம் குறிப்பிட்டுக் கூறுகின்றோம். 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன மனிதாபிமான சேவையில் ஈடுபாடு கொண்ட குறிப்பிடத்தக்க கத்தோலிக்க சமூகத் தலைவர்களான தந்தை திருச்செல்வம், நிஹால் ஜிம் பிரவுன் மற்றும் தந்தை பிரான்சிஸ் ஜோசப் ஆகியோரின் நினைவையும் நாங்கள் மதிக்கிறோம்.
இந்த அருங்காட்சியக இடத்தின் ஊடாக இந்த அட்டூழியங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பழிவாங்கும் வன்முறைகளால் உயிர் இழந்த மற்றும் பாதிப்புக்களுக்கு உள்ளான மக்களுக்கு எங்கள் மரியாதை செலுத்துகிறோம். சாத்தியமான சந்தர்ப்பங்களில் நாங்கள் மிகவும் உயிர்ப்பாக ஈடுபட்டு மதத் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்களிடமிருந்து சாட்சியங்களை சேகரித்து உள்வாங்கியுள்ளதுடன் சமூக ஆவணங்கள் மற்றும் நினைவு நடைமுறைகளின் கூறுகளையும் இணைத்துள்ளோம்
உள்ளடக்க எச்சரிக்கை/தூண்டுதல் எச்சரிக்கை:
போர் மற்றும் இன வன்முறை, காயம், அட்டூழியங்கள், மரணம் மற்றும் பாரபட்சமான அணுகுமுறைகள் அல்லது செயல்கள் பற்றிய விளக்கங்கள், சித்தரிப்புகள் மற்றும் விவாதங்கள்