top of page

நவீன மத அடையாளங்களின் உருவாக்கம்

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மத - சமூக அடையாளங்கள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டன என்பதை நவீன மத அடையாளங்களின் உருவாக்கம் ஆராய்கிறது. 

இந்தக் காலப்பகுதியில், இலங்கை சிலோன் என அழைக்கப்பட்டதுடன் பிரித்தானிய அரசின் ஒரு பகுதியாக ஆக்கிரமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. பெருந்தோட்டத்துறையின் உருவாக்கம், ‘கிழக்கு’ மற்றும் ‘மேற்குக்கு’ இடையில் இந்து சமுத்திரத்தில் பரபரப்பான துறைமுகமாக இலங்கை திகழ்ந்ததன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது.

காலனித்துவ சிலோனில் நவீன மத அடையாள உருவாக்கம், அந்தக் காலப்பகுதியில் நிகழ்ந்த விரைவான உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப புரிந்துகொள்ளப்பட வேண்டும். பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்த ஐரோப்பிய - அமெரிக்க மிஷனரிகளின் பயணம் மற்றும் பணிகள், பயணங்களுக்கான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களின் விரிவாக்கம், ஆவணப்படுத்தல், முக்கியமாக அச்சு மற்றும் காட்சி கலாசாரம் ஆகியவற்றுடன் காலனித்துவ நிர்வாகம் மற்றும் கல்வி நடைமுறைகள் காரணமாக பூர்வீக மக்களை ‘நாகரீகமாக்குதல்’ மற்றும் ஆட்சிசெய்தல் ஆகியவை இதில் அடங்குகின்றன. ஐரோப்பிய காலனித்துவ அதிகாரங்களால் அடிமைப்படுத்தப்பட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் காலனித்துவத்திற்கு எதிரான உணர்வு மற்றும் இயக்கங்கள் வளர்ந்து வந்ததன் காரணமாக, இன மத தேசியவாத உணர்வுகள் தோன்றின. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இலங்கையில் பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் குழுக்களிடையே இதைக் காண முடிந்தது. குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டுமன்றி, உலகின் பிற பகுதிகளிலும் இவ்வாறான இயங்கங்கள் உருவாகின. மத அடையாள உருவாக்கம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்ப மாறக்கூடியது என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம் ஆகும்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, இந்தக் காலப்பகுதியில் மத வாழ்க்கையை வடிவமைக்கும் முக்கிய நிகழ்வுகள், தனிநபர்கள் மற்றும் செயல்முறைகளில் நவீன மத அடையாள உருவாக்கம் கவனம் செலுத்துகிறது. இந்தக் காலகட்டத்தின் இன-மத சமூகமயமாக்கல் மற்றும் அரசியல்மயமாக்கலுக்கு கல்வி, பொது நிகழ்வுகள் மற்றும் பிரச்சாரங்கள், சங்கங்களின் உருவாக்கங்கள் மற்றும் அச்சிடப்பட்ட விடயங்கள் மையமாக இருந்தன.

உள்ளடக்க எச்சரிக்கைஃதூண்டுதல் எச்சரிக்கை:
காலனித்துவ மற்றும் வகுப்புவாத வன்முறை, மரணம், இழிவான மொழி மற்றும் காட்சிகள், பாரபட்சமான அணுகுமுறைகள் அல்லது செயல்கள் பற்றிய விளக்கங்கள், சித்தரிப்புகள் மற்றும் விவாதங்கள்.
 

bottom of page