மதமும் காலனித்துவ அரசும
மதமும் காலனித்துவ அரசும் பிரித்தானிய காலனித்துவ இலங்கையில் சமகால மத அடையாள உருவாக்கத்தின் தொடக்கத்தை ஆராய்கிறது.
பல நூற்றாண்டுகளாக இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் மத நிலத்தோற்றம், பல்வேறு வர்த்தகர்கள், பயணிகள், உலகெங்கிலும் உள்ள தூதுவர்கள், அத்துடன் போட்டியிடும் ஐரோப்பிய காலனித்துவ சக்திகளின் வன்முறை ஆக்கிரமிப்புகளின் வருகை போன்றவற்றால் தீவிரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
1815 இல் பிரித்தானிய மகுடத்தின் கீழ் இலங்கையினை பலவந்தமாக 'ஒருங்கிணைப்பு' செய்த நிகழ்வானது இலங்கை தன்னை ஒரு 'அரசாக' வலுவூட்டிக் கொள்வதில் பாரிய பங்கை வகித்துள்ளது. கண்டிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம் அரசுக்கும் பௌத்த மதத்திற்கும் இடையிலான தொடர்பின் முறையான அங்கீகாரம் நிறுவப்பட்டது. இது நவீனகால இலங்கைக்கு நீண்டகால தாக்கங்களை ஏற்படுதவல்லது. இந்த வரலாற்றுத் தருணம் அரசின் மத 'அடையாளம்' மற்றும் பல்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றும் குடிமக்களிற்கும் அரசிறிகும் இடையிலலான் உறவைத் தீர்மானிக்கும் காரணியாகவும் அமைந்தது. இந்த உறவானது ஆதரவு மற்றும் வன்முறை என்னும் இரண்டு முரண்பாடுகளால் வரையறுக்கப்பட்டு காணப்பட்டது. ஆதரவு மற்றும் வன்முறை ஆகிய இரண்டாலும் முரண்பாடாக வரையறுக்கப்பட்ட உறவு அது. காலனித்துவ அரசின் இனம் மற்றும் மதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட நிர்வாக வகைப்படுத்தல் மற்றும் உள்ளுர், உலகலாவிய மோதல்கள், தொடர்புகள் என்பவற்றால் இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான இன மத அடையாளங்கள் மேலும் தெளிவாக வெளிப்பட்டது.
1815-1915 க்கு இடையில் நடந்த தொடர்ச்சியான முக்கிய நிகழ்வுகளை முன்னிறுத்தி, நாங்கள் காலனித்துவ அரசின் சட்டமன்ற மரபுகள் மற்றும் இலங்கையின் இனமத சமூகங்களின் 'நவீன' கருத்தாக்கம் மற்றும் சமூகமயமாக்கல் ஆகியவற்றை ஆராய்கின்றோம். உள்ளூர் மத நடைமுறைகள் மற்றும் சடங்குகள் ஏகாதிபத்திய எதிர்ப்பை வெளிக்கொனர்வதற்கு சாத்தியமான தளங்களாக பார்க்கப்பட்ட பின்னணியில், அடக்குமுறைக் கொள்கைகள் மற்றும் காலனித்துவ அடக்குமுறை மற்றும் அரசின் அட்டூழியத்தின் பின்விளைவுகள் ஆகியவற்றால் அதிகரித்த மதங்களுக்கு இடையிலான பதட்டங்களைப் பற்றி சிந்திக்குமாறு பார்வையாளர்களிடன் வேண்டுகிறோம்.
உள்ளடக்க எச்சரிக்கைஃதூண்டுதல் எச்சரிக்கை:
காலனித்துவ மற்றும் வகுப்புவாத வன்முறை, மரணம், இழிவான மொழி மற்றும் காட்சிகள், பாரபட்சமான அணுகுமுறைகள் அல்லது செயல்கள் பற்றிய விளக்கங்கள், சித்தரிப்புகள் மற்றும் விவாதங்கள்.